Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
About Us
பிரதேச செயலாளர்
2025ஆம் ஆண்டில் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக பணியாளர் குழாம் மற்றும் அவ் ஆண்டின் உண்மை பணியாளர் விபரம் பின்வருமாறு,
| பதவி | மத்திய அரசு | வெற்றிடங்கள் | மாகண சபைகள் | வெற்றிடங்கள் | ||
| அங்கீகரிக்கப்பட்டது |
தற்போது
|
அங்கீகரிக்கப்பட்டது |
தற்போது
|
|||
| பிரதேச செயலாளர் | 01 | 01 | - | - | - | |
| உதவி பிரதேச செயலாளர் | 01 | 01 | - | - | - | |
| கணக்காளர் | 01 | 01 | - | - | - | |
| உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 | 01 | - | - | - | - |
| நிருவாக உத்தியோகத்தர் | 01 | 01 | - | - | - | |
| நிருவாக உத்தியோகத்தர் (கிராம அலுவலர்) | 01 | 01 | - | - | - | |
| மேலதிக மாவட்ட பதிவாளர் | 01 | 01 | - | - | - | - |
| முகாமைத்துவ உத்தியோகத்தர் | 26 | 25 | 1 | - | - | - |
| மொழிபெயர்ப்பாளர் | 00 | 01 | - | - | - | |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | 06 | 08 | ||||
| அபிவிருத்தி உத்தியோகத்தர்(அபிவிருத்தி) | 58 | 83 | ||||
| சாரதி | 02 | 02 | - | - | - | |
| அலுவலக உதவியாளர் | 06 | 06 | - | - | - | |
| தகவல் மற்றும் தொலைதொடர்பு உதவியாளர் | 01 | 01 | - | - | - | - |
எமது நோக்கம
எமது குறிக்கோள்
சேவை நாடுநர்களின் தேவைகளை உகந்த முறையில் நிறைவேற்றுவதற்கான மனித மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடனும் வழிநடாத்துதல்.
நாவுல பிரதேசத்தின் வரலாற்றுப் பின்ணனி
நாவுல பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணியைப் பொறுத்தமட்டில், இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரியது. இப் பிரதேசமானது நாக வம்சத்தினரின் இருப்பிடமாக இருந்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. இப்பிரதேசத்திற்கு நாவுல என்ற பெயர் குறிப்பிடப்படுவதற்கு பல வாய்மொழிக்கதைகள் உள்ளன. அவற்றுள் நாக வம்சத்தினரின் வாழிடமாக இருந்தமை அல்லது நாகத்தின் வடிவிலான ஒரு நீருற்று அமையப்பெற்றமை அல்லது நாகமரங்கள் நிறைந்திருந்தமை போன்ற கருத்துக்கள் பிரபல்யமானதாக கொள்ளப்படுகின்றன.
கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 9ஆம் நூற்றாண்டிற்குள் உருவாக்கப்பட்ட பல்லவ மரபைச் சேர்ந்த லக்திவ கட்டிடக்கலைக்குரிய நாலந்த கெடிகே புராதனக்கட்டடம் இப் பிரதேசத்தின் தலைமை செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கொத்மல- தமன்கடுவ பிரதான வீதியானது நாவுல பிரதேசத்திற்குரிய அம்பன கிராமத்தின் ஊடாக செல்கிறது. வரலாற்றில் அபன என்ற பிரதேசம் ‘அபனவனயணீ’ என்று அறியப்பட்டது. இவ் அம்பன வனத்தின் ஊடாகப் பாயும் ஆறு பிற்காலத்தில் ‘அம்பன் கங்கை’ என்று கூறப்பட்டது.
துட்டகைமுனு மன்னனை பாம்பொன்று தீண்டிய போது இப் பிரதேசத்தின் நாலந்த- தியன்கடுவ வீதியில் வாழ்ந்த ராஜகுரு பரம்பரைக்குரியவர்கள் மருத்துவம் செய்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.
ஐ ஆம் பராக்கிரமபாகு இளவரசன் மற்றும் பொலன்னறுவையினை ஆட்சி செய்த கஜபா மன்னன் ஆகியோருக்கிடையே மூன்ட போரானது, வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகவும் கொடிய யுத்தமாகும். அவ் யுத்தத்தின் போது பராக்கிரமபாகு இளவரசனது பிரதான யுத்த களம் மற்றும் முகாமாக நாலாந்த, அம்பன, எலகமுவ மற்றும் தலாகொட ஆகிய முகாம்கள் விளங்கின. இப் போரின் போது ஐ ஆம் பராக்கிரமபாகு அரசன் இலங்கையினை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன், அதற்கு நாவுல பிரதேசத்து மக்கள் அவ் வெற்றிக்கு பாரிய பங்கினை வகித்தனர்
அத்துடன், 1848ஆம் ஆண்டு மாத்தளை சுதந்திரப் போராட்டத்தின் போது தலைவர்களால் பாதுகாப்பான பூமியாக நாவுல பிரதேசத்தை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காரணங்களின் அடிப்படையில், நாவுல பிரதேச செயலகமானது ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் செயற்பாடுகள்
பணிகளை மேற்கொள்ள முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரி முன்பு பிரதி அரசாங்க அதிபர் என்று அழைக்கப்பட்டார்.பணிகளை மேற்கொள்ள முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரி முன்பு பிரதி அரசாங்க அதிபர் என்று அழைக்கப்பட்டார்.
1963 ஆம் ஆண்டு நாவுல பிரதேச செயலகத்தின் ஆரம்பமாகக் கொள்ளப்படுகிறது. 1931ஆம் ஆண்டில் அமைச்சரவையில் மாத்தளை மாவட்டத்திற்குரிய ஆசனத்தில் ஒரு பகுதியாக இருந்த நாவுல 1990 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை லக்கல நிர்வாக எல்லைக்குட்பட்ட 04 பிரதேச சபைப்பிரிவின் அதிக சனத்தொகையைக் கொண்ட மற்றும் அதிக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட பிரிவாகக் காணப்படுகிறது.
விவசாய பொருளாதார முறைமை மற்றும் பௌத்த மத சூழலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற நாவுல பிரதேச செயலக பிரிவின் பிரதான நகரமாக நாவுல நகரம் விளங்குகிறது. மாத்தளை-தம்புள்ளை பிரதான வீதி, இந் நகரத்தின் மத்தியில் செல்வதுடன், புராணத்தில் இராஜரட்டை மற்றும் மலையகத்தை இணைத்த பிரதான வீதி இதுவாகும். மேலும், எலஹர மற்றும் கிரிதலே ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தையும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள லக்கல, உடசியபத்துவையையும் இணைக்கும் வீதிகள் ஒன்றுடன் ஒன்று சந்;திக்கும் முற் சந்தியாகவும் இப் பிரதேசம் உள்ளது.
சுதுகங்க மற்றும் நக்கல்ஸ் மலைத்தொடரில் உற்பத்தியாகும் அம்பன்கங்கையை பிரதானமாகக் கொண்ட வடிகால் அமைப்பைக் கொண்டுள்ளதுடன், இப்பிரதேசம் முழுவதும் நாலந்த மற்றும் கல் ஓயா போன்ற கிளை நதிகள் பரவியுள்ளன. போவதென்ன நீர்த்தேக்கத்தை பிரதானமாகக் கொண்டு, 15 குளங்கள்;, 40 சிறிய மற்றும் பெரிய அணைக்கட்டுக்கள்; கொண்டமைந்துள்ளதுடன்;, அவற்றுள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீ வெட்டிய மற்றும் வெமெடில்ல குளங்கள் அடங்கும். தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மொரகஹகந்த நீர்த்தேக்கம், நாவுல பிரிவிற்கு முழுவதுமாக உட்பட்ட கிராம உத்தியோகத்தர் 6 பிரிவுகள் மற்றும் பகுதி அளவில் உட்பட்ட கிராம உத்தியோகத்தர் 6 பிரிவுகளும் உள்ளடங்கியுள்ளன. அத்துடன், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினால் இப் பிரதேசத்தை சேர்ந்த 1600 குடும்பங்கள் பிரதேசத்திலிருந்து வெளியேறினார்கள். தற்போது நாவுல பிரதேச செயலகமானது 46 கிராம உத்தியோத்தர் பிரிவுகளையும் அவற்றிற்குரிய 118 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளன..
நாவுல பிரதேசத்தின் வரைப்படம்

நாவுல பிரதேசத்தின் நிர்வாக உறுப்பினர்கள்
| பெயர் | பதவி | இருந்து | செய்ய | |
| 1 | திரு. எல்.பி.ஹுருல்லே | கோட்ட வருவாய் அலுவலர் | 1960 | 1967 |
| 2 | திரு. டி.ஜி.ஏகநாயக்க | கோட்ட வருவாய் அலுவலர் | 1967 | 1977 |
| 3 | திரு. கே. ஏகநாயக்க | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 4 | திரு. ஏகநாயக்க | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 5 | திரு. மெடிவாகா | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 6 | திரு. குணதிலகா | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 7 | திரு. ரம்பண்டா ரணதுங்க | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 8 | திரு. கஜநாயக்க | கோட்ட வருவாய் அலுவலர் | ||
| 9 | திரு.எச்.ஆர்.விஜேசிறி | உதவி அரசாங்க அதிபர் | 1977 | 1981 |
| 10 | திரு.ஜே.ஜி.பி.திசாநாயக்க | உதவி அரசாங்க அதிபர் | 1982 | 1982 |
| 11 | திரு.டபிள்யூ.பி.கணேகலா | உதவி அரசாங்க அதிபர் | 1983 | 1985 |
| 12 | திரு.டபிள்யூ.பி.ஏகநாயக்க | உதவி அரசாங்க அதிபர் | 1986 | 1989 |
| 13 | திரு.பி.எச்.கே.அபேகூன் | பிரதேச செயலாளர் | 1990 | 1990 |
| 14 | திரு.பி.ஏ.பி.ஜெயவர்தனா | பிரதேச செயலாளர் | 1991 | 1992 |
| 15 | திரு.டபிள்யூ.பி.ஏகநாயக்க | பிரதேச செயலாளர் | 1992 | 1992 |
| 16 | திரு.பி.எல்.நந்தசிறி | பிரதேச செயலாளர் | 1995 | 1996 |
| 17 | திரு.எச்.எம்.சோமதிலகே | பிரதேச செயலாளர் | 1996 | 2001 |
| 18 | திரு.ஆர்.கே.பிரேமசிறி | பிரதேச செயலாளர் | 2001 | 2002 |
| 19 | திரு.கே.ஏ.சிரிசேன | பிரதேச செயலாளர் | 2002 | 2010 |
| 20 | திரு.எம்.வர்ணகுலசூரிய | பிரதேச செயலாளர் | 2010 | 2012 |
| 21 | திரு.என்.கருணாதிலகே | பிரதேச செயலாளர் | 2012 | 2017 |
| 22 | திருமதி.ஏ.டி.ஜெயரத்னா | பிரதேச செயலாளர் | 2017 | 2020 |
| 23 | திரு.சி.கே.பி.இளங்கசிங்கே | பிரதேச செயலாளர் | 2020 | 2023 |
| 24 | திரு. எஸ்.விஜய்குமார் | பிரதேச செயலாளர் | 2023 | இன்றைய நாள் |



























